
Pakishtan three cricket players changed from world cup team
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்க உள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியின் முதல் ஆட்டம் மே 30 அன்று இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் இடையே நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் கோப்பையை வெல்லப்போவது யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் உலக கோப்பை போட்டிகள் நெருங்கும் நேரேத்தில் பாகிஸ்தான் அணியின் மூன்று வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு புதிதாக மூன்று வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலில் அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பெறாத முகமது அமீர், வகாப் ரியாஸ், ஆசிப் அலி ஆகியோர் தற்போது அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜுனைத் கான், பஹீம் அஷ்ரப், அபித் அலி ஆகியோர் முதலில் அறிவிக்கப்பட்ட அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விளக்கமளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சமீபத்தில் இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு சரியாக அமையாதது ஏமாற்றத்தை தந்தது.
இதனால் அணி வீரர்களை மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது சேர்க்கப்பட்ட மூன்று வீரர்களில் இரண்டு வீரர்கள் பந்துவீச்சில் மிகுந்த அனுபவம் கொண்டவர்கள். இவர்கள் உலகக்கோப்பை தொடர் முழுவதும் எதிர் அணி வீரர்களுக்கு பெரும் சவாலாக இருப்பார்கள். எனவேதான் இந்த அதிரடி மாற்றம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement