விளையாட்டு

இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் இந்த 3 பேரையும் எந்த அணியும் வாங்கவே மாட்டார்கள்.! அந்த லிஸ்டில் இவருமா.!

Summary:

இந்தியாவில் நடைபெறவிருக்கும் 14-வது ஐபிஎல் தொடரில், ஏலத்தில் எடுக்க வாய்ப்பே இல்லாத மூன்று வீரர்கள் உள்ளனர்.

2021ஆம் ஆண்டுக்கான 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 14 வது ஐபிஎல் சீசனின் மினி ஏலத்தை பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், ஐபிஎல் ஏலத்தின் போது முக்கிய வீரர்களை ஏலம் எடுக்க, ஐபிஎல் அணிகளிடையே கடுமையான மோதல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மூன்று வீரர்களை எந்த ஒரு ஐபிஎல் அணியும் எடுக்காது என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பல கோடி ரூபாய் செலவில் தேர்வு செய்யப்பட்ட கிரிஸ் மோரிஸ், செல்டன் காட்ரேல் மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய மூன்று வீரர்கள் இந்த ஆண்டு மினி ஏலத்தில் எந்த அணியும் தேர்வு செய்யமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

ஏனெனில், பெங்களூரு அணிக்காக எடுக்கப்பட்ட கிரிஸ் மோரிஸ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஐபிஎல் தொடருக்கு பின் உடல் தகுதி இல்லாததால் எந்த போட்டிகளிலும் பங்கு பெறவில்லை. இப்போது அவர் அந்தளவிற்கு பார்மில் இல்லை.

 அதேபோல் கடந்த ஆண்டு அதிக பணத்தில் வாங்கப்பட்ட செல்டன் காட்ரேல், கடந்த ஆண்டு மோசமான பந்துவீச்சு காரணமாக தற்போது அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட இருக்கிறார். இதனால் இந்த ஆண்டு மினி ஏலத்தில் எந்த அணியும் இவரை தெரிவு செய்யாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக கேதார் ஜாதவ், கடந்த ஆண்டு சென்னை ரசிகர்கள் பலரின் வெறுப்பை சம்பாதித்தார், இதனால் இவரையும் எந்த அணியும் தெரிவு செய்யாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement