ஐபிஎல் 2020: ஆஸி, இங்கி வீரர்களுக்கு 6 நாள் குவாரன்டைன் கட்டாயம்.. ஏமாற்றமடைந்த அணி நிர்வாகம்!

ஐபிஎல் 2020: ஆஸி, இங்கி வீரர்களுக்கு 6 நாள் குவாரன்டைன் கட்டாயம்.. ஏமாற்றமடைந்த அணி நிர்வாகம்!


no-relaxation-for-aus-eng-players-in-ipl2020

செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐபிஎல் 2020 தொடர் துவங்கவுள்ளது. இந்த தொடருக்காக அணி வீரர்கள் தகுந்த பாதுகாப்பு வலையத்தில் வைக்கப்பட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா தொடரில் பங்குபெறும் வீரர்கள் செப்டம்பர் 17 ஆம் தேதி யூஏஇக்கு வருகின்றனர். ஏற்கனவே பாதுகாப்பு வலையத்தில் இவர்கள் இருப்பதால் 6 நாள் கட்டாய குவாரண்டைன் விதி தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

IPL2020

ஆனால் இவர்கள் அனைவரும் 6 நாள் கட்டாயம் குவாரண்டைனில் இருக்க வேண்டும் என்றும் 3 கொரோனா பரிசோதனைகளில் நெகட்டிவ் வரும்பட்சத்தில் செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். இந்த சமயத்தில் அனைத்து அணிகளும் ஒரு போட்டியிலும் சென்னை மற்றும் மும்பை அணிகள் இரண்டு போட்டிகளிலும் விளையாடி இருக்கும்.

இதனால் ஸ்மித், டை, பட்லர், டாம் குர்ரான், ஆர்ச்சர் ஆகிய முக்கிய வீரர்களை கொண்ட ராஜஸ்தான் அணியும் பின்ச், பிலிப், ஆடம் சம்பா, மொயின் அலி ஆகியோரை கொண்ட பெங்களூரு அணியும், வார்னர் மற்றும் பெயர்ஸ்டோவை கொண்டுள்ள ஹைதராபாத் அணியும் பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளது.