விளையாட்டு வீடியோ

அடிபட்டு துடிதுடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்! அலேக்காக தூக்கிகொண்டு ஓடிய நியூஸிலாந்து வீரர்! தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ!

Summary:

newzland cricket players carry west indies injured player

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஜுனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நியூஸிலாந்து அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதியது. அதில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது.அப்பொழுது  48 ஓவர்கள் முடிவில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி 238 ரன்களை குவித்தது.

பேட்டிங்கின் போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் மெக்கன்ஸி களமிறங்கி சிறப்பாக விளையாடி கொண்டிருந்துள்ளார். மேலும் அப்பொழுது 104 பந்துகளுக்கு 99 ரன்களும் குவித்தார். அப்பொழுது ரன் எடுக்க அவர் ஓடியபோது அவரது காலில் கடுமையான அடி ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விக்கெட்டை இழந்து, மெக்கன்ஸி நடக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.

அப்பொழுது நியூஸிலாந்து அணி வீரர்கள் அவருக்கு உதவும்வகையில் அவரை அப்படியே அலேக்காக தூக்கி கொண்டு சென்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் உட்பட அனைவரும் நியூஸிலாந்து வீரர்களின் செயலை பாராட்டி வருகின்றனர்.


Advertisement