இந்தியா விளையாட்டு

இந்தியாவை விட நியூசிலாந்துக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம்.! பிரட்லீ கொடுத்த ஷாக் தகவல்.! என்ன காரணம் தெரியுமா.?

Summary:

நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு இந்திய அணி தயாராக உள்ளது. இதன் இறுத

நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு இந்திய அணி தயாராக உள்ளது. இதன் இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் 22 வரை சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல இந்தியா, நியூசிலாந்து இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகிறது. இதற்கான இந்திய அணி இங்கிலாந்து சென்றுவிட்டது. 

நியூசிலாந்து அணி இங்கிலாந்துடன் 2 டெஸ்ட் போட்டிகள் ஆடி பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டி குறித்து, ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ கூறுகையில், என்னைப் பொறுத்த வரை இந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்தின் கையே ஓங்கியிருக்கும்.

ஏனென்றால், நியூசிலாந்து மைதானமும், இங்கிலாந்து மைதானமும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால், நியூசிலாந்து பவுலர்களுக்கு இந்த மைதானங்கள் பெரிதளவு கைகொடுக்கும். இதனால், நியூசிலாந்து பவுலர்கள் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் இந்திய அணிக்கு எதிராக பந்து வீச முடியும் என்பதால், நியூசிலாந்து அணியின் கையே மேலோங்கி இருப்பதாக நான் கருதுகிறேன்.

பேட்டிங்கை பொறுத்தவரை இரு அணிகளும் சம பலத்துடன் இருந்தாலும் பந்துவீச்சில் நியூசிலாந்து அணிக்கு சற்று சாதகமாக இருக்கும் என்று நான் நம்புவதால் எந்த அணி சிறப்பாக பந்துவீசுகிறதோ அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று பிரெட் லீ கூறியுள்ளார். 


Advertisement