5 நாட்களுக்கு ஒரு முறை கட்டாய சோதனை.. வெளியானது IPL 2020 புதிய விதிமுறைகள்!

5 நாட்களுக்கு ஒரு முறை கட்டாய சோதனை.. வெளியானது IPL 2020 புதிய விதிமுறைகள்!


New SOP for ILP 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரானது வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. கொரோனா அச்சத்திற்கு இடையில் நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்கும் அணி வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் வெளியாகியுள்ளன.

16 பக்கம் கொண்ட இந்த புதிய விதிமுறையின்படி UAE க்கு பயணத்தை துவங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு கட்டாயம் இரண்டு PCR சோதனைகள் செய்ய வேண்டும். UAE சென்றவுடன் முதல் 6 நாட்கள் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்திக்கொண்டு 3 முறை கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். சக அணி வீரர்களையும் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த 3 சேதனைகளிலும் கொரோனா இல்லை என்ற முடிவு வந்தால் அடுத்தபடியாக பாதுகாப்பு அம்சங்கள் பொறுந்திய மைதானத்தில் பயிற்சி பெற வீரர்கள் அனுமதிக்கப்படுவர். 5 நாட்களுக்குஒரு முறை கட்டாயம் வீரர்கள் பரிசோதனை செய்ய வேண்டும். 

8 அணிகளும் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட வேண்டும். மைதானத்தில் வீரர்கள் நெருங்கி ஆலோசனை செய்ய கூடாது. வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை செய்யலாம், இல்லையெனில் பொது இடங்களிலோ அல்லது பெரிய அறைகளிலோ தகுந்த சமூக இடைவெளியினை கடைப்பிடித்து ஆலோசனைகள் செய்ய வேண்டும்.

வீரர்கள், போட்டி நடுவர்களுக்கு தனியாகவும், மைதான ஊழியர்களுக்கு மற்றும் அணி நிர்வாகிகளுக்கு தனித்தனியாக என பகுதிகள் பிரிக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே நடமாட வேண்டும்.

இவ்வாறு பல விதிமுறைகள் அடங்கிய அந்த அறிக்கையானது அனைத்து அணிகளுக்கும் அனுப்பட்டுள்ளது. இதனை ஒவ்வொரு அணியின் மருத்துவ குழுவினர் கண்கானிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.