
new plan in ipl
ஐபிஎல் தொடரில் விரைவில் அதிரடி மாற்றம் ஒன்றை செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.அதன் படி இனி ஒரு அணியில் 11 வீரர்கள் மட்டுமே ஆட முடியும் என்ற நிலை மாற்றப்பட்டு, எந்த நேரத்திலும் வெளியில் இருக்கும் வீரரை ஆட வைக்கலாம் என கூறப்படுகிறது.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு அதிக ரன்கள் தேவைப்படும்பொழுது, கடைசி கட்டவீரர் பேட்டிங் செய்தால் அந்த ரன்களை குவிக்க முடியாத நிலை ஏற்படும். அப்போது, அதிரடியாக விளையாடக் கூடிய, ஆடும் லெவனில் இல்லாத மாற்று வீரரை களமிறக்கிக் கொள்ளலாம்.
இந்த மாற்று வீரர்கள் பவர் பிளேயர் என அழைக்கப்படுவார்கள் எனகூறப்படுகிறது. இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால், அணிகளின் திட்டமிடல் முற்றிலுமாக மாறும். மேலும், ரசிகர்களை இந்த புதிய நடைமுறை பெரிய அளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கிறது. போட்டியை பரபரப்பாக்கும் விதமாக இந்த முறையை அமல்படுத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
Advertisement
Advertisement