கேப்டன் பதவியை விட்டு விலக மறுத்த கோலி.! பிசிசிஐ கொடுத்த கெடு.. யாரு கேப்டன் பார்த்தீங்களா..!

கேப்டன் பதவியை விட்டு விலக மறுத்த கோலி.! பிசிசிஐ கொடுத்த கெடு.. யாரு கேப்டன் பார்த்தீங்களா..!


new captain to indian cricket team

இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்கு பிறகு விராட்  3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வந்தார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலியின் பேட்டிங் திறன் சமீப காலமாக மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகுவது நல்லது என்று கருத்து எழுந்தது. இந்தநிலையில் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் சமீபத்தில் அறிவித்தார்.

இதனையடுத்து விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், நேற்று திடீரென்று இந்திய அணிக்கு புதிய கேப்டனாக ரோகித் இருப்பார் என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது. விராட் கோலி தன்னுடைய ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து தானாக விலகுவதற்கான ஒரு வாய்ப்பை பிசிசிஐ கொடுத்ததாகவும், இதற்காக நேரக் கெடுவும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் விராட் கோலி எந்த ஒரு பதிலும் சொல்லாத காரணத்தினால், பிசிசிஐ அதிரடியாக ரோஹித் சர்மாவை கேப்டனாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விராட் கோலியும் இதுவரை இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.