ரன்னே கொடுக்காமல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த வீராங்கனை!

ரன்னே கொடுக்காமல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த வீராங்கனை!


nepal women bowler got 6 wickets without run


நேபாள மகளிர் அணி மற்றும் மாலத்தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணி இடையே தெற்கு ஆசிய விளையாட்டு போட்டிகளின் T20 போட்டி இன்று போகாராவில் நடைபெற்றது.

இந்த இரண்டு அணிகளும் சிறிய அணிகள் என்பதால் பெரியளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால் யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு, இளம்வீரங்கனை ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

t20

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மாலத்தீவுகள் அணி 11 ஓவர்களில் வெறும் 16 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்துவீசிய நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த் ரன் ஏதும் கொடுக்காமல் 2.1 ஓவர்கள் பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் மாலத்தீவைச் சேர்ந்த மாஸ் எலிசா என்பவரின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனா பெண்களுக்கு எதிராக, சிறப்பாக பந்து வீசிய எலிசா 3 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.