தமிழகம் இந்தியா விளையாட்டு

நட்டு நீங்க வேற லெவல்.. ஒரே போட்டி.. இரண்டு பெருமை.. தமிழக வீரர் நடராஜனுக்கு குவியும் பாராட்டுக்கள்..

Summary:

இன்றைய டெஸ்ட் போட்டி மூலம் தமிழக வீரர் நடராஜனுக்கு அடுத்தடுத்து பெருமை கிடைத்துள்ளது.

இன்றைய டெஸ்ட் போட்டி மூலம் தமிழக வீரர் நடராஜனுக்கு அடுத்தடுத்து பெருமை கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் போட்டி, T20 போட்டிகளை அடுத்து தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. இரண்டு அணிகளும் தலா ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றுள்ளநிலையில் தற்போது நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற தீவிரத்துடன் இரண்டு அணிகளும் விளையாடிவருகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய அணியின் வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒருநாள் போட்டி மற்றும் T20 போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டநிலையில் தற்போது அவருக்கு டெஸ்ட் போட்டியிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன் மூலம் ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடி, தனது முதல் சர்வதேச  போட்டிகளை பதிவு செய்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமை நடராஜனுக்கு கிடைத்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இன்றைய போட்டியில் களமிறங்கியதன் மூலம், இந்திய அணிக்காக களமிறங்கும் 300 வது டெஸ்ட் போட்டி வீரர் என்ற பெருமையும் நடராஜனுக்கு கிடைத்துள்ளது.


Advertisement