தமிழகம் இந்தியா விளையாட்டு

நடராஜனை உடனே நீக்குங்கள்.! பிசிசிஐ விடுத்த கோரிக்கை.! என்ன காரணம் தெரியுமா.?

Summary:

இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சேலத்து நடராஜன், பிசிசிஐயின் கோரிக்கை அடிப்படை

இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சேலத்து நடராஜன், பிசிசிஐயின் கோரிக்கை அடிப்படையில் விஜய் ஹசாரே டிராபியில் பங்கேற்கும் தமிழ்நாடு அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர்  இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஒருநாள், டி20 தொடர்களில் களமிறங்குவது உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய் ஹசாரே டிராபியில் நடராஜன் பங்கேற்கும் பட்சத்தில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். ஆனால் அந்த நேரத்தில் இங்கிலாந்து எதிரான ஒருநாள், டி20 தொடரில் நடராஜன் பெயர் சேர்க்கப்பட்டால், இந்திய அணிக்கு திரும்பி மீண்டும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, இரண்டு தனிமைப்படுத்துதல்களைத் தவிர்க்கவே அவர் தமிழ்நாடு அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அவரை அணியில் இருந்து விடுவித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடராஜன் இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடம் பெறுவதற்காக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் பயிற்சிக்கு செல்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement