இந்திய அணி எடுத்துள்ள பிரம்மாஸ்த்திரம்.. இன்று இங்கிலாந்தை வீழ்த்த இறுதிப் போட்டியில் நடராஜன்..Natarajan playing in Final T20 against to England

இந்தியா - இங்கிலாந்து மோதும் இறுதி T20 போட்டியில் தமிழக வீரர் நடராஜன் விளையாடுகிறார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய மோதல் நான்கு போட்டிகளில் இரண்டு அணிகளும் இதுவரை தலா இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு அணிகளும் சமநிலையில் இருப்பதால் கடைசி போட்டியான இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணியே தொடரை வெல்லும்.

natarajan

இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது. இன்றைய போட்டியில் KL ராகுலுக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் விளையாட உள்ளார்.

முதல் நான்கு போட்டிகளில் விளையாடாத நடராஜன் இன்றைய முக்கிய போட்டியில் விளையாடுகிறார். இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற ஆகவேண்டும் என்ற நிலையில் KL ராகுலை நீக்கிவிட்டு நடராஜனை அணியில் சேர்த்துள்ளது.