பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
சேலத்து செல்லப்பிள்ளை தமிழகத்தின் வீரப்பிள்ளை நடராஜனை பெற்றெடுத்த தாய்.! அவருக்கு குவிந்துவரும் வாழ்த்துக்கள்.!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபித்த தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் நடராஜனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றிய நிலையில், நேற்றைய ஆட்டத்தில் ஆறுதல் வெற்றிக்காக களமிறங்கியது.
அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 302 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி. 9.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் மார்னஸ் லபுஸ்சேன் இந்திய அணியின் நடராஜன் வீசிய பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தி உள்ளார் நடராஜன். தமிழக வீரர் நடராஜன் தனது முதல் சர்வதேச போட்டியிலே முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்தநிலையில் நடராஜனுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் சேலத்து செல்லப்பிள்ளை தமிழகத்தின் வீரப்பிள்ளையை பெற்றெடுத்த அவரது தாயின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.