கேள்விக்குறியானது சென்னை அணியின் தொடர் வெற்றி! கெத்து காட்டும் மும்பை அணி!
கேள்விக்குறியானது சென்னை அணியின் தொடர் வெற்றி! கெத்து காட்டும் மும்பை அணி!

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. சென்னை, மும்பை அணிகள் இடையேயான முதல் போட்டி இன்று மும்பையில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற சென்னை அணி மும்பை அணியை பேட் செய்ய அழைத்து. ஆரம்பம் முதல் தடுமாறிய மும்பை அணி 19 ஓவர்கள் வரை 141 ரன் மட்டுமே எடுத்திருந்தது.
20 வது ஓவரை பிராவோ வீசினர். பிராவோ வீசிய அனைத்து பந்துகளையும் மும்பை அணியின் பிராவோ சிக்ஸர், பவுண்டரியாக பறக்க விட்டார். இதன் மூலம் மும்பை அணி இறுதி ஓவரில் மட்டும் 29 ஓட்டங்கள் பெற்று அணியின் எண்ணிக்கை 170 ஆனது.
கடினமான இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ராயிடு மற்றும் வார்னர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். தொடக்க வீரர்களை இழந்த சென்னை அணி வெற்றிக்காக போராடி வருகிறது.
171 என்ற கடினமான இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ராயிடு மற்றும் வார்னர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இவர்களது இழப்பை அடுத்து அடித்து விளையாடிய ரெய்னாவும் 5 வது ஓவரில் ஆட்டம் இழந்து வெளியேறினார். தொடக்க வீரர்களை இழந்த சென்னை அணி வெற்றிக்காக போராடி வருகிறது.