ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி வாங்க நினைத்த முக்கிய வீரரை கோடிக்கணக்கில் எடுத்த மும்பை அணி! யார் அந்த வீரர்?

ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி வாங்க நினைத்த முக்கிய வீரரை கோடிக்கணக்கில் எடுத்த மும்பை அணி! யார் அந்த வீரர்?


mumbai team and csk team ipl player

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின் போது ஆஸ்திரேலிய வீரரை எடுப்பதற்காக சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவிய நிலையில் குல்டர் நைலை மும்பை அணி ஏலத்தில் எடுத்தது.

2020 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடருக்கு ஏலம் கடந்த 19-ஆம் தேதி துவங்கியது. அந்த ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லாவை சென்னை அணி 6 கோடிக்கு மேல் வாங்கியது. சாவ்லாவை எடுப்பதற்கு முக்கிய காரணமே தோனி தான் என்று அந்த அணி நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் இந்த ஏலத்தின் போது ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான குல்டர் நைலை எடுப்பதற்கு சென்னை அணி மிகுந்த ஆர்வம் காட்டியது, ஆனால் மும்பை அணியும் அவரை ஏலத்தில் எடுப்பதில் ஆர்வம் காட்டியது. இதனால் இரு அணிகளுமே ஏலத்தில் போட்டி போட்டு பணத்தை அறிவித்துக்கொண்டே இருந்தனர். இறுதியில் மும்பை அணி அவரை 8 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது.