விளையாட்டு

ஆசை காட்டி மோசம் செய்த பெங்களூர் அணி! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

Summary:

Mumbai indians won by 5 wickets against to rcb

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 31 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி இந்த சீசனிலும் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை அந்த சொந்த மண்ணில் எதிர்கொண்டது பெங்களூர் அணி.

முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது. பெங்களூர் அணியின் கேப்டன் விராட்கோலி சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, டீ வில்லியர்ஸ் மட்டும் அதிரடியாக விளையாடி 75 ரன் எடுத்தார். மெயின் அலி 50 ரன் எடுத்து சிறப்பாக விளையாடினார்.

172 என்ற சற்று கடினமான இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அதன்பின்னர் வரிசையாக விக்கெட் விழுந்ததால் மும்பை அணி சற்று தடுமாறியது. பெங்களூர் அணி வெற்றிபெற்றுவிடும் என நினைத்த வேலையில் ஹர்டிக் பாண்டியாவின் அசுர ஆட்டத்தால் மும்பை அணி 19 வது ஓவரின் இறுதி பந்தில் வெற்றிபெற்றது.

இதுவரை நடந்த போட்டிகளில் பெங்களூர் அணி பஞ்சாப் அணியுடன் நடந்த கடைசி போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றது. இனி வரும் போட்டிகளில் பெங்களூர் அணி அடுத்தடுத்து வெற்றிபெறும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் பெங்களூர் அணி மீண்டும் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement