இந்தியா விளையாட்டு

சன்ரைசர்ஸ் அணி வீரரால் மும்பை அணிக்கு திடீரென அடித்த அதிர்ஷ்டம்.! தலைகீழாக மாறிய ஆட்டம்.!

Summary:

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், நேற்றைய 9-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், நேற்றைய 9-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதியது. நேற்றைய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நேற்றய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணியின் துவக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ரோஹித் சர்மா 25 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து விஜய் சங்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து அதிரடி காட்டிய டிகாக் 39 பந்துகளில் 40 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 

அடுத்ததாக களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 7 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், பொல்லார்டு சிறப்பாக ஆடி 22 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.

     

இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்களான வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் அதிரடியாக ஆடினர். டேவிட் வார்னர் 36 ரன்கள் எடுத்தநிலையிலும், பேர்ஸ்டோவ் 43 ரன்கள் எடுத்தநிலையிலும் அவுட் ஆன பிறகு சன்ரைசர்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பேர்ஸ்டோவின் விக்கெட்டிற்கு பிறகு ஐதராபாத் அணியில் தோய்வு ஏற்பட்டது. 

குருணால் பாண்டியா வீசிய பந்தில் பேர்ஸ்டோவ் ஸ்வீப் ஷாட் அடிக்க முற்பட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக அவரது கால் ஸ்டம்பில் மோதி ஹிட் விக்கெட் ஆனார். இதனால் சன்ரைசர்ஸ் அணிக்கு பெரும் ஏமாற்றமும், மும்பை அணிக்கு ஜாக்பாட்டும் அடித்தது. இதனையடுத்து விஜய் சங்கர் ஓரளவிற்ற்கு அணியை வெற்றி பாதையில் நோக்கி கொண்டு சென்றிருந்த நிலையில் அவரும் 28 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் 19.4 ஓவர்களில் ஐதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து மும்பை அணி13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


Advertisement