விளையாட்டு

தூக்குங்க அந்த 7 பேர.. பிரபல வீரர் உட்பட 7 பேரை அணியில் இருந்து தூக்கியது மும்பை இந்தியன்ஸ்! யார் யார் தெரியுமா?

Summary:

மும்பை அணி நிர்வாகம் தங்கள் அணியில் இருந்து 7 வீரர்களின் ஒப்பந்தத்தை முடித்து அவர்களை விடுவித்துள்ளது.

மும்பை அணி நிர்வாகம் தங்கள் அணியில் இருந்து 7 வீரர்களின் ஒப்பந்தத்தை முடித்து அவர்களை விடுவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், ஐபில் அணிகளுக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் மினி ஏலம் ஒன்றை வரும் பிப்ரவரி மாதம் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த மினி ஏலத்தின்போது ஐபில் அணிகள் தங்கள் அணியில் இருக்கும் சில வீரர்களை விடுவித்து, அந்த பணத்தை கொண்டு புது வீரர்களை தேர்ந்தெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.

அதன்படி நடப்பு சாம்பியனான மும்பை அணி தங்கள் அணியில் இருந்து 7 வீரர்களின் ஒப்பந்தத்தை முடித்து, அவர்களை விடுவித்துள்ளது. இதன் மூலம் மும்பை அணி அடுத்த மாதம் நடைபெற இருக்கும் மினி ஐபில் ஏலத்தில் புது வீரர்களை தேர்வு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மும்பை அணி தங்கள் அணியில் இருந்து விடுவித்துல அந்த 7 வீரர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.


1 . நாதன் கவுண்டர் நைல்,
2 . மிட்சல் மெக்லாங்கன்,
3 . லசித் மலிங்கா
4 . ஜேம்ஸ் பட்டின்சன்
5 . பிரின்ஸ் பல்வாண்ட் ராய்
6. டிக்விஜய் தேஷ்முக்
7 . சர்ஃபேன் ருத்தர்போட்


Advertisement