விளையாட்டு

இவ்ளோ பணம் இருந்தா போதும்..! லைஃப்ல செட்டில் ஆயிடுவேன்..! தோனி சொன்ன தொகை எவ்வளவு தெரியுமா?

Summary:

MS Dhoni wanted to earn Rs 30 lakh and live peacefully

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான வாசிம் ஜாபர் தல தோனி சொன்ன ஒரு ரகசியத்தை தற்போது வெளியே கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணியுடனான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு, எந்த ஒரு சர்வேதச போட்டிகளிலும் தோனி விளையாடவில்லை. இந்நிலையில், இந்த இந்த மாதம் மார்ச் 29 தொடங்க இருந்த ஐபில் போட்டியில் தோனியின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.

ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக ஐபில் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வாசிம் ஜாபரிடம் தோனியின் புகைப்படத்தை காண்பித்து, அவர் குறித்த மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் இருக்கிறதா என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த வாசிம் ஜாபர், இந்திய அணியில் தோனி இடம் பிடித்த ஆரம்பகாலத்தில், ஒரு 30 லட்சம் சம்பாதித்து விட்டால் போதும், ராஞ்சியில் சென்று செட்டில் ஆகி, அமைதியான வாழ்க்கை வாழ்வேன் என தோனி வாசிம் ஜாபரிடம் கூறியுள்ளார். 30 லட்சம் சம்பாதித்தால் போதும் என்று சொன்ன தோனி, பின்னாளில் இந்திய அணியின் மிகசிறந்த கேப்டன்களில் ஒருவராக மாறியுள்ளார் என பெருமையாக கூறினார்.

அன்று 30 லட்சம் சம்பாதித்தால் போதும் என கூறிய தல தோனியின் சொத்து மதிப்பு இன்று பல நூறு கோடிகள் இருக்கும்.


Advertisement