இந்த வருடம் எங்களுக்கானதாக இல்லை.! நேற்றைய ஆட்டம் முடிந்து தோனி என்ன பேசியுள்ளார் பாருங்கள்.!

இந்த வருடம் எங்களுக்கானதாக இல்லை.! நேற்றைய ஆட்டம் முடிந்து தோனி என்ன பேசியுள்ளார் பாருங்கள்.!


ms-dhoni-talk-about-yesterday-match-LABJK7

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 41வது ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடியது. பல போட்டிகளில் தோல்வியடைந்த சென்னை அணி நேற்றைய போட்டியிலாவது சிறப்பாக ஆடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், நேற்றைய போட்டியில் சென்னை அணி மிக மோசமாக விளையாடியுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சென்னை அணி முதல் ஓவரிலேய விக்கெட்டை பறிகொடுக்க ஆரம்பித்து, அடுத்தடுத்து சென்னை அணி வீரர்கள் அவுட் ஆகி வெளியேறினர். சென்னை அணியில் அதிகபட்சமாக சாம் கரன் 47 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.csk

இதனையடுத்து மும்பை அணி 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கியது. மும்பை அணியின் துவக்க வீரர்கள் இருவரும் மட்டுமே சென்னை அணியின் சோலியை முடித்தனர். டி காக் 37 பந்துகளில் 46 ரன்களும் இஷான் கிஷன்  37 பந்துகளில் 68 ரன்களும் எடுத்து 12.2 ஓவர்களில் 116 ரன்களை எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.

நேற்றைய போட்டிக்குப் பிறகு வரணணையாளர்களிடம் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, இந்த ஆண்டு எங்களுக்கான ஆண்டாக அமையவில்லை. ஒரு சில போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடினோம். அனைத்து வீரர்களும் வேதனை அடைந்துள்ளனர். எனினும் தங்களால் முடிந்ததை செய்தனர். அடுத்த ஆண்டு தெளிவான பிளான் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.