விளையாட்டு

நேற்றைய தோல்விக்கு என்ன காரணம்.? ஓப்பனாக பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி.!

Summary:

நேற்றைய தோல்விக்கு இவர்கள் தான் காரணம், என தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 21-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியில் துவக்க வீரராக களமிறங்கி இறுதிவரை ஆடிய திரிபாதி 51 பந்துகளுக்கு 81 ரன்கள் எடுத்திருந்தார். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் அணைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 167 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடியது. சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக வாட்சன் 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகினார். இறுதியில் 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 157 ரன்களே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆட்டம் முடிந்து பேட்டி அளித்த  சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, "எங்களது அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. ஆனால் பேட்டிங் மோசமாக இருந்தது. எங்கள் அணி கடைசி நேரத்தில் சிங்கள் ரன்கள், பவுண்டரிகள் எடுக்காதது தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினர்" என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தெரிவித்தார்.


Advertisement