102 மீட்டர் தூரத்திற்கு சிக்சரை பறக்கவிட்ட தல தோனி.! அடுத்த நிமிடமே பழிதீர்த்த தமிழக வீரர் நடராஜன்.!

102 மீட்டர் தூரத்திற்கு சிக்சரை பறக்கவிட்ட தல தோனி.! அடுத்த நிமிடமே பழிதீர்த்த தமிழக வீரர் நடராஜன்.!


ms-dhoni-hited-102-meters-sixer

ஐபிஎல் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 29 போட்டிகள் முடிந்துள்ளநிலையில், நேற்று நடந்த 29 வது போட்டியில் சென்னை மற்றும் ஹைத்ராபாத் அணிகள் மோதியதில் சென்னை அணி அபார வெற்றிபெற்றது. 

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. நேற்றய போட்டியில், சிஎஸ்கே கேப்டன் தோனி 13 பந்துகளில் 21 ரன்கள் நடித்திருந்தார். தமிழக வீரர் நடராஜனின் ஓவரில் தோனி 102 மீட்டர் தூரத்திற்கு அற்புதமான ஒரு சிக்சரை பறக்கவிட்டார். ஆனால் அடுத்த பந்திலேயே நடராஜன் பழிதீர்த்துக் கொண்டார். அவர் வீசிய புல்டாஸ் பந்தினை தோனி தொக்கி அடித்தபோது அந்த பந்தை வில்லியம்சன் கேட்ச் செய்தார். 

MS Dhoni

சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 167  ரன்கள் எடுத்திருந்தது.168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.