மனைவிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து அசத்திய தல தோனி.! என்ன ஸ்பெஷல்னு பார்த்தீங்களா.?ms-dhoni-given-a-gift-to-his-wife

1981 ஆம் ஆண்டு ஜீலை 7 ஆம் தேதி பிறந்த தல தோனி இன்று 40வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 2004 ஆம் ஆண்டு வங்காளாதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிரங்கிய தோனி. அதில் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து,  2007 ஆம் ஆண்டு  20 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெல்லவும் காரணமாக இருந்துள்ளார். 

தல, கேப்டன் கூல் என்றெல்லாம் பட்டப்பெயர்களில் ரசிகர்கள் இவரை அழைத்து வருகின்றனர். தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் இவர் தலைமையிலான  இந்திய அணி  பல்வேறு சாதனைகளைப் படைத்தது. இந்தநிலையில் இன்று பிறந்தநாள் காணும்  தோனிக்கு உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள்  சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

MS Dhoni

தோனி கடந்த 2010ஆம் ஆண்டு சாக்ஷியை திருமணம் செய்து கொண்டார். மேலும் சாக்ஷியை தான் ஏற்கனவே காதலித்து வந்தததையும் அவர் வெளியுலகிற்கு தெரிவித்தார். இந்நிலையில் 11 ஆண்டுகளைக் கடந்து இன்றைக்கும் இணைப்பிரியா ஜோடிகளாக இருந்து வரும் டோனி - சாக்‌ஷி தம்பதிகள் சமீபத்தில் தங்களது 11 ஆவது திருமண நாளைக் கொண்டாடி உள்ளனர். திருமணத் தினத்தை முன்னிட்டு தோனி வின்டேஜ் காரை சர்பிரைஸாக கொடுத்துள்ளார். தோனி கொடுத்த சர்ப்பிரைஸ் கிஃப்ட் புகைப்படத்தை சாக்ஷி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.