இந்தியா விளையாட்டு

மீண்டும் கேப்டனாகிறார் தல தோனி.! வெளியானது கனவு அணி பட்டியல்.! உச்சகட்ட குஷியில் ரசிகர்கள்.!

Summary:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) டி20 கிரிக்கெட்டின் கனவு அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்டு ஐ.சி.சி. கனவு அணியைத் தேர்வு செய்துள்ளது. இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் அணியின் வீரர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு உள்ளது.  இதன்படி, ஐ.சி.சி.யின் சர்வதேச இருபது ஓவர் கனவு அணியின் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இந்த பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகிய இந்திய வீரர்களும் கனவு அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்திய வீரர்கள் தவிர்த்து இந்த அணியில், உலக அளவிலான கிரிக்கெட் அணிகளின் வீரர்களான கிறிஸ் கெய்ல், ஏபி டீ வில்லியர்ஸ், ஆரோன் பின்ச் மற்றும் மலிங்கா உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர் 

ரோகித் மற்றும் கெய்ல் தொடக்க ஆட்டக்காரர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த அணியில் தோனி கேப்டனாகவும் மற்றும் விக்கெட் கீப்பராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.  ஐ.சி.சி.யின் டெஸ்ட் கனவு அணியின் கேப்டனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஐசிசி அறிவித்துள்ள ஒருநாள், டி20, டெஸ்ட் கனவு அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களின் பட்டியல் வரிசைப்படி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், ஷாகிப் அல் ஹசன், தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ்,  மிட்செல் ஸ்டார்க், ட்ரெண்ட் போல்ட், ஸ்டுவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன்

டி20 அணியில் ரோஹித் சர்மா, கிறிஸ் கெய்ல், ஆரோன் பிஞ், விராட் கோலி,  ஏபி டி வில்லியர்ஸ், கிளென் மேக்ஸ்வெல், தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), கைரோன் பொல்லார்ட்,  ரஷீத் கான், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மலிங்கா ஆகியோர் உள்ளனர்.


டெஸ்ட் அணியில் ஆலஸ்டைர் குக், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், விராட் கோலி (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், சங்கக்கரா(விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், டேல் ஸ்டெய்ன், ஸ்டுவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்


Advertisement