தமிழகம் இந்தியா விளையாட்டு

சென்னையில் கம்பீரமாக சிங்கநடை போடும் தல தோனி! வீடியோவை பார்த்து புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

Summary:

ms Dhoni came chennai for ipl

ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்த டோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக நேற்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

ஐ.சி.சி உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடைசியாக விளையாடினார்.
அதன்பிறகு தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்த மகேந்திர சிங் தோனி, ஐபிஎல்-க்கு தயாராகி வந்தார்.

இந்த நிலையில் தற்போது சென்னை வந்திருக்கும் மகேந்திர சிங் தோனியின் புகைப்படம், மற்றும் வீடியோக்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Advertisement