சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த லேடி டோனி!. என் பயணம் நிறைவடைய இதுவே தருணம்: மிதாலிராஜ் உருக்கம்..!

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த லேடி டோனி!. என் பயணம் நிறைவடைய இதுவே தருணம்: மிதாலிராஜ் உருக்கம்..!



mithali-raj-retires-from-international-womens-cricket

இந்திய மகளிர் கிரிக்கெட்  அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனான மிதாலி ராஜ், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தனது ஓய்வு முடிவு குறித்து மிதாலி ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொருவருக்கும் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு என்பது மிக உயர்ந்த கவுரவம். இந்திய கிரிக்கெட் அணியின் நீல நிற ஜெர்சி அணிவதற்கான பயணத்தில் ஒரு சிறுமியாக நான் புறப்பட்டேன். என்னுடைய பயணம் உயர்வும் தாழ்வும் நிறைந்ததாக இருந்தது.

ஒவ்வொரு நிகழ்வும் எனக்கு தனித்துவமான ஒன்றைக் கற்றுக் கொடுத்தது. கடந்த 23 வருடங்கள் என் வாழ்வில் மிகவும் நிறைவான, சவாலான மற்றும் மகிழ்ச்சியான வருடங்களாக இருந்தன. எல்லா பயணங்களையும் போலவே இந்த பயணமும் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். இன்று நான் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறும் நாள்.

 வ்வொரு முறையும் நான் களத்தில் இறங்கும் போதும், இந்திய அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்ற உத்வேகத்துடன் என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்தேன். மூவர்ணக் கொடியை பிரதிநிதித்துவப்படுத்த எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் எப்போதும் மதிக்கிறேன்.

தற்போது திறமையான இளம் வீராங்கனைகளின் கையில் இந்திய அணி உள்ளது. தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் பாதுகாப்பான கைகளில் இருப்பதாக உணர்கிறேன். இது நான் கிரிக்கெட்டில் இருந்து  ஓய்வு பெறுவதற்கான சரியான நேரமாக இதை கருதுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

முதலில் ஒரு வீராங்கனையாகவும் பின்னர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் எனக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் பி.சி.சி.ஐ மற்றும் ஜெய் ஷா (கௌரவச் செயலாளர், பி.சி.சி.ஐ)-க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இத்தனை ஆண்டுகள் அணியை வழிநடத்தியது பெருமையாக இருந்தது.

இது நிச்சயமாக என்னை ஒரு கேப்டனாக வடிவமைத்தது மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட்டை வடிவமைக்க உதவியது. இந்தப் பயணம் முடிந்திருக்கலாம், ஆனால் நான் விரும்பும் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடவும், இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் விரும்புகிறேன். எனது ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.