"என் வாழ்வின் இருண்ட நாட்கள் இவை. கடவுளே! எனக்கு சக்தி கொடுங்கள்" என மன்றாடும் மிதாலி ராஜ்

"என் வாழ்வின் இருண்ட நாட்கள் இவை. கடவுளே! எனக்கு சக்தி கொடுங்கள்" என மன்றாடும் மிதாலி ராஜ்



Mithali raj prays god to give strength

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தொடரின் ஆரம்பம் முதல் சிறப்பாக ஆடிய முன்னணி வீராங்கனை மிதாலி ராஜ் அரையிறுதி அணியில் சேர்க்கப்படாதது குறித்து பல்வேறு சர்ச்சையான செய்திகள் வெளியாகின. 

இதனையடுத்து, இந்திய மகளிர் அணி இந்தியா திரும்பியதும் அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் மிதாலி ராஜ் ஆகியோரிடம் பிசிசிஐ அதிகாரிகள் தனித்தனியாக விளக்கம் கேட்டனர்.

Mithali raj

அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐக்கு மிதாலி ராஜ் மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பினார். அதில், “அதிகாரத்தில் உள்ள சிலரது நடவடிக்கைகளால் நான் அவமானப்படுத்தப்பட்டேன். பயிற்சியாளர் ரமேஷ் பவார் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி ஆகியோர் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, என்னை அணியில் இருந்து நீக்கிவிட்டனர்.” என்று தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களால் மனமுடைந்த மிதாலி ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் "20 ஆண்டுகாலமாக இந்த நாட்டிற்காக நான் கிரிக்கெட் ஆடியுள்ளேன். ஆனால் முதல்முறையாக என் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகுந்த சோர்வை சந்தித்துள்ளேன். அதிகாரத்தில் இருப்பவர்களின் செயல் என்னௌ மிகவும் காயப்படுத்தி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. என்னுடைய கடின உழைப்பு அனைத்தும் வீணாகிவிட்டது. 

Mithali raj

இன்று எனது நாட்டுப்பற்றின் மீது சந்தேகமும், என் திறமையின் மீது கேள்விகுறியும் ஏற்பட்டுள்ளது. எல்லாம் மண்ணில் புதைந்துவிட்டதைப் போல் உணர்கிறேன். என் வாழ்வின் இருண்ட நாட்கள் இவை. கடவுளே! எனக்கு சக்தி கொடுங்கள்" என மன்றாடியுள்ளார்.