சிங்க பெண்ணே..... பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த மிதாலி ராஜ்.!

சிங்க பெண்ணே..... பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த மிதாலி ராஜ்.!


mithali raj new record

12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஹாமில்டனில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட்இண்டீசுடன் விளையாடி வருகிறது.

இன்று நடக்கும் போட்டியில் கேப்டனாக தலைமை தாங்கியதன் மூலம் உலக கோப்பை போட்டியில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பெலின்டா கிளார்க்கின் (23 ஆட்டங்கள்) சாதனையை மிதாலி ராஜ் முறியடித்தார்.

உலக கோப்பை தொடரில், இதுவரை மிதாலி ராஜ்  24 ஆட்டங்களில் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியில் பல இளம் வீரர்கள் உருவாவதற்கு முன்னுதாரணமாக எப்படி சச்சின் டெண்டுல்கர் விளங்குகிறாரோ அதேபோல் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கும் பெரும் நாயகியாக விளங்குகிறார் மிதாலி ராஜ்.