புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
சச்சினின் தகர்க்க முடியாத சாதனையை தொட்ட இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ்.! குவிந்துவரும் வாழ்த்துக்கள்.!
கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்திருக்கிறார். இதில் சில சாதனைகள் தகர்க்கப்பட்டாலும், இன்றளவும் தகர்க்க முடியாத பல சாதனைகள் இருக்கின்றன.
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் படைத்த வரலாற்றுச் சாதனையை, இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் தொட்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு தசாப்தங்களை கடந்து விளையாடிய வீரர்கள் பட்டியலில் சச்சின் பெயர் மட்டுமே இருக்கிறது.
சச்சின் மொத்தம் 22 ஆண்டுகள் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடினார். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி மூலம், மிதாலி ராஜ் ஒருநாள் கிரிக்கெட்டில் 22 ஆண்டில் அடியெடுத்து வைத்து, சச்சின் சாதனையை தொட்டுள்ளார். 38 வயதான மிதாலி ராஜ் இதுவரை 215 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
கடந்த 1999 ஜூனில் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய அணியில் அறிமுக வீராங்கனையாக களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு இடையேயான ஒருநாள் போட்டியில் அவர் 72 ரன்களை எடுத்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி களத்தில் அவர் 7170 ரன்களை சேர்த்துள்ளார். இந்தநிலையில், சச்சினின் சாதனையை தொட்ட இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ்க்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.