கிரிக்கெட்டின் மீது தீராத காதலால் 9 வருடங்கள் குடும்பத்தை பிரிந்து தவித்த மும்பை இந்தியன்ஸ் வீரர்..!

கிரிக்கெட்டின் மீது தீராத காதலால் 9 வருடங்கள் குடும்பத்தை பிரிந்து தவித்த மும்பை இந்தியன்ஸ் வீரர்..!


mi-player-kumar-karthikeya-met-his-family-after-9-years

குமார் கார்த்திகேயா 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமானார். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான கார்த்திகேயா தனது முதல் ஐபிஎல் போட்டியில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

மிகப்பெரிய இலக்கை அடைந்துள்ள குமார் கார்த்திகேயா கடந்து வந்த பாதை சற்று கடினமானதாகவே உள்ளது. ஒருபக்கம் கிரிக்கெட்டின் மீது தீராத காதல் மறுபக்கம் குடும்பத்தில் வறுமை என இவரது இளம் பருவம் இருந்துள்ளது. இதனால் தனது 15 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய கார்த்திகேயா ஒரு தொழிற்சாலையில் பணியாற்றியுள்ளார். கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஒரு இலக்கை அடைந்த பிறகே மீண்டும் வீட்டிற்கு வருவேன் என சபதமும் எடுத்துள்ளார்.

Mumbai indians

2018ம் ஆண்டில் ரஞ்சி டிராபியில் மத்தியபிரதேச அணிக்காக அறிமுகமானார். அதன் பின்னர் கடின உழைப்பின் பலனாக 2022 ஆம் ஆண்டுக்கான மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு தனது சக வீரர்களுடன் லண்டனுக்கு பயணித்து விட்டார் கார்த்திகேயா.

24 வயதாகும் கார்த்திகேயா நாடு திரும்பியவுடன், 9 வருடம் 3 மாதங்களுக்கு பிறகு தனது தாய் மற்றும் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். அந்த உன்னதமான தருணத்தை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் கார்த்திக்கேயா.