இந்தியா விளையாட்டு

குத்துசண்டை போட்டி மீண்டும் தங்கம் வென்றார் மேரி கோம்!

Summary:

Mary kom won gold medal for india

இந்தியாவின் தங்க மங்கை என்றால் அது மேரி கோம் தான். பிரபல குத்து சண்டை வீராங்கனையான இவர் இந்திய அளவில் மிகவும் பிரபலம்.

இந்நிலையில் போலந்து நாட்டின் கிளிவிஸ் நகரில் நடந்த மகளீருக்கான 13வது சில்சியன் குத்துசண்டை போட்டியில், இந்தியாவின் மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

48 கிலோ எடைப் பிரிவில் அவர் கஜகஸ்தானின் அகிரிம் காஷனையேவாவை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்த ஆண்டு மட்டும் இத்துடன் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் மேரி கோம்.


Advertisement