இந்த வீரர் இல்லாத உலகக்கோப்பை அணியா! லக்ஷ்மணனின் கருத்து

இந்த வீரர் இல்லாத உலகக்கோப்பை அணியா! லக்ஷ்மணனின் கருத்து


Laxmanana predicted Indian team

வரும் மே மாதம் இங்கிலாந்தில் துவங்க இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி யானது நெருங்குவதால் அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை தேர்வு செய்வதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணியை செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடரில் பல வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு சோதனை முயற்சியில் ஈடுபடவுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.

இந்நிலையில் உலகக் கோப்பைக்கான உத்தேச இந்திய கிரிக்கெட் அணியை முன்னாள் வீரர் லட்சுமணன் அறிவித்துள்ளார். இதில் பலராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பெறுவதே சிறந்தது என லட்சுமணன் விளக்கம் அளித்துள்ளார்.

cricket

மேலும் இவர் பேட்டிங்கில் கேஎல் ராகுல் மற்றும் பந்துவீச்சில் கலீல் அகமத் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கின்றார். அதேசமயம் ரவீந்திர ஜடேஜா இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய உத்தேச அணி:
ரோகித் சர்மா, தவான், விராட் கோலி, அம்பத்தி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டியா, சாகல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது சாமி, பும்ரா, கேஎல் ராகுல், கலீல் அஹ்மத்