தயவுசெய்து அதை விட்டுடுங்க!! பதறிப்போய் தோனிக்கு கோரிக்கை விடுத்த பிரபல பாடகி!! - TamilSpark
TamilSpark Logo
சினிமா விளையாட்டு

தயவுசெய்து அதை விட்டுடுங்க!! பதறிப்போய் தோனிக்கு கோரிக்கை விடுத்த பிரபல பாடகி!!

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக்கோப்பை முதல் அரையிறுதி போட்டி நேற்றைக்கு முதல் நாள் தொடங்கி நியூசிலாந்து பேட்டிங் செய்தபோது மழையின் காரணமாக போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் மீதமுள்ள ஆட்டங்கள் நேற்று நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. 

எளிமையான இலக்கை வென்றுவிடலாம் என்ற கனவோடு பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது நியூசிலாந்து அணி. மேலும் அடுத்தடுத்ததாக முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்த நிலையில் இந்திய ரசிகர்கள்  நம்பிக்கையை இழந்து மிகுந்த வருத்ததில் இருந்தனர்.

இந்த நிலையில் அவர்களை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தோனியும், ஜடேஜாவும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி மீண்டும் நம்பிக்கையை கொடுத்தனர்.ஆனால் அவர்களும் விக்கெட்டை இழந்து வெளியேறியதை தொடர்ந்து  இந்தியா 18  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இந்நிலையில் தோனிக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் இருந்தாலும், எதிர்மறையான சில விமர்சனங்களும் எழுந்தது. மேலும் தோனி ஓய்வு குறித்து அறிவிக்கவிருப்பதாகவும் கருத்துக்கள் எழுந்தது.இந்நிலையில் தோனிக்கு புகழ் வாய்ந்த பாடகி லதா மங்கேஷ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வணக்கம் தோனி, நீங்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்க போகிறீர்கள் என்ற தகவலை நான் கேள்விப்பட்டேன். அவ்வாறு நீங்கள் யோசித்திருந்தால் அதை உடனே மாற்றி கொள்ளுங்கள். இந்திய அணிக்கு நீங்க தேவை. எனவே நீங்கள் தற்போது ஓய்வு குறித்து யோசிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.
 


Advertisement


ServiceTree
தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo