விளையாட்டு

பறக்கும் பந்துகள், வான வேடிக்கை காட்டும் க்ரிஷ் கெய்ல்! பஞ்சாப் அணியின் ஸ்கோர் என்ன தெரியுமா?

Summary:

KXIP vs mumbai indians grish gaiyil smashing mumbai bowling

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 23 போட்டிகளில் சென்னை, கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் கைதராபாத் அணிகள் முதல் நான்கு இடத்தில் உள்ளது. நேற்றைய போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சென்னை அணி முதல் இடத்திற்கு முன்னேறியது.

இந்நிலையில் இன்று நடைபெற்றுவரும் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் விளையாடி வருகிறது. மும்பையின் சொந்த மண்ணில் வான்கடே மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி பஞ்சாப் அணியை பேட் செய்ய அழைத்தது.

பஞ்சாப் அணியின் சார்பாக இறங்கிய KL ராகுல் மற்றும் க்றிஸ் கெய்ல் இருவரும் மும்பை அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்து வருகின்றனர். 12 ஓவர்கள் முடிவு பெற்றுள்ள நிலையில் அணியின் எண்ணிக்கை 113 வதை தொட்டுள்ளது. க்ரிஷ் கெய்ல் சிக்சரும், பவுண்டரியுமாக மும்பை அணியின் பந்து வீச்சை பிரித்து மேய்ந்து வருகிறார்.

கெய்ல் 34 பந்துகளில் 62 ரன். 7 சிக்ஸர், 3 பவுண்டரி. KL ராகுல் 38 பந்துகளில் 48 ரன். 2 சிக்ஸர், 4 பவுண்டரி.


Advertisement