தமிழகம் விளையாட்டு

ஐபில் ஏலத்தில் மாஸ் கட்டிய தமிழக வீரர்.. போட்டி போட்ட அணிகள்.. 20 லட்சத்தில் ஆரம்பித்து 5 கோடிக்கு மேல் சென்ற விலை..

Summary:

சென்னையில் நடந்த ஐபில் ஏலத்தில் தமிழக வீரர் ஒருவரை பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது.

சென்னையில் நடந்த ஐபில் ஏலத்தில் தமிழக வீரர் ஒருவரை பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது.

இந்த ஆண்டிற்கான ஐபில் போட்டிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இந்த ஆண்டிற்கான ஐபில் ஏலம் நேற்று சென்னையில் தொடங்கியது. இந்த ஏலத்தில் அதிகபட்ச விலையாக கிரிஷ் மோரிஷை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.

அதற்கு அடுத்தபடியாக அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லை 14.25 கோடிக்கு பெங்களூர் அணி வாங்கியது. இந்நிலையில் தமிழக வீரர் ஷாருக்கான் என்பவரை 5.25 கோடிக்கு பஞ்சாப் அணி விலைக்கு வாங்கியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி கோப்பையில் தமிழக அணியில் விளையாடிய ஷாருக்கான் மிகவும் சிறப்பாக விளையாடி, அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

குறிப்பாக இறுதி போட்டியில் கடைசி 7 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். அது மட்டுமில்லாமல், லீக் போட்டிகளிலும் ஷாருக்கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் ஐபில் போட்டியில் இவருக்கு அமோக வரவேற்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல் ஷாருக்கானை ஏலத்தில் எடுக்க டெல்லி கேப்பிடல்ஸ் அணி, பஞ்சாப் அணி, பெங்களூரு அணி ஆகிய மூன்று அணிகளும் கடும் போட்டி போட்டது. 20 லட்ச ரூபாயாக இவரது அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் இறுதியில் பஞ்சாப் அணி இவரை 5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.


Advertisement