விளையாட்டு

இன்றைக்கு ஐபில் போட்டி கிடையாது!! இரண்டு முக்கிய வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு.

Summary:

கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்றைய போட்ட

கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்றைய போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐபில் 14 வது சீசன் T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 29 போட்டிகள் நடந்து முடிந்துள்ளநிலையில் டெல்லி அணி 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் அனைத்து அணிகளும் கோப்பையை வெல்லும் முயற்சியில் தீவிரமாக விளையாடிவருகிறது.

இதனிடையே இன்றைய போட்டியானது கொல்கத்தா - பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற இருந்தது. இந்நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டது. இதனால் கொல்கத்தா - பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த இன்றைய போட்டியானது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


Advertisement