இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்டுக்கு இத்தனை கோடியா..! ஆட்டம் சுமாராக இருந்தாலும் கோடியில் புரளும் கோலி!Kholi's margin increases in instagram

தற்போதைய காலகட்டத்தில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதில் முதுமையான சமூக வலைத்தளமாக இன்ஸ்டாகிராம் இருந்துவருகிறது. புகைப்படங்களை மட்டுமே பார்த்து ரசிக்கக்கூடிய சாமானியர்கள் ஒருபக்கம் இருக்க, தாங்கள் பதிவிடும் புகைப்படங்களைக் கொண்டே பல நட்சத்திரங்கள் கோடி கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.

இந்தப் பட்டியலில் இந்தியாவின் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் தற்போது விராட் கோலிக்கு ரூபாய் 8.69 கோடி‌ வருமானம் கிடைப்பதாக Hooper’s 2022 Instagram Rich List தெரிவிக்கிறது.

virat kholi

இந்தப் பட்டியலில் உலக அளவில் விராட் கோலி 14வது இடத்தில் உள்ளார். விளையாட்டு வீரர்களுக்கான பட்டியலில் 4-வது இடத்தில் விராட் கோலி இருக்க முதல் இரண்டு இடங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி உள்ளனர்.

கடந்த ஆண்டில் 5.5 கோடி மட்டுமே பெற்று வந்த விராட் கோலி இந்த ஆண்டு 8.69 கோடியை பெற்று வருகிறார். கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் ரன் விகிதம் ஒரு பக்கம் குறைந்து கொண்டிருந்தாலும் உலக அளவில் அவருடைய மதிப்பு உயர்வதை இது காட்டுகிறது.