விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மேள தாளத்துடன் வரவேற்பு; திருவனந்தபுரத்தில் ரசிகர்கள் அமர்க்களம்!

Summary:

kerala fans invited indian cricket team with warm greetings

மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணி கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை வென்றது. 

அடுத்து தொடங்கிய 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வென்று முன்னிலையில் உள்ளது. தொடரில் 5 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் வியாழன் அன்று கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்பீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் இன்று மதியம் விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு அங்கு மேள தளங்களுடன் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை கண்டு வீரர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். 


Advertisement