கேதர் ஜாதவ் படைத்த மிகவும் வித்தியாசமான புதிய சாதனை! என்ன சாதனை தெரியுமா?

கேதர் ஜாதவ் படைத்த மிகவும் வித்தியாசமான புதிய சாதனை! என்ன சாதனை தெரியுமா?



Kedar jadhav sets new record who never hit six for maximum balls

அதிக பந்துகளை சந்தித்து, ஒரு சிக்ஸர் கூட அடிக்காத வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் சென்னை அணி வீரர் கேதர் ஜாதவ்.

ஐபில் 2020:

ஐபில் போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 22 போட்டிகள் முடிந்துள்ளநிலையில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் புள்ளி பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளது.

தொடர் தோல்வியில் சென்னை அணி:

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி தொடர் தோல்விகளால் புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இதுவரை 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. கடந்த ஆட்டத்தில் சென்னை அணி கொல்கத்தா அணியிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ipl t20

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டம்:

சிறப்பான பந்துவீச்சு, அற்புதமான தொடக்கம் என கடந்த போட்டி சிறப்பாக அமைந்தாலும், சென்னை அணி ஒருசில காரணங்களால் தோல்வியை சந்தித்தது. அதிலும் கேதர் ஜாதவின் ஆட்டம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதிரடியாக ஆட வேண்டிய நேரத்தில் கேதர் ஜாதவ் டெஸ்ட் போட்டி போல் விளையாடியதால்தான் சென்னை அணி தோல்வி அடைந்ததாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ipl t20

கேதர் ஜாதாவின் மோசமான புது சாதனை:

இதுஒருபும் இருக்க, கேதர் ஜாதவ் படைத்துள்ள புதிய சாதனை ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் கேதர் ஜாதவ் இதுவரை 4 போட்டிகளில் களமிறங்கியநிலையில் இதுவரை 59 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். இதில் 59 பந்துகளில் அவர் அடித்த ரன்கள் 58 .

அதில் ஒருமுறை கூட அவர் சிக்ஸர் அடிக்கவில்லை. இது புதிய சாதனையாக தற்போது பதிவாகியுள்ளது. அதிக பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் கூட அடிக்காத வீரர்களின் பட்டியலில் கேதர் ஜாதவ் தற்போது முதலிடம் பிடித்துள்ளார்.