விளையாட்டு

சென்னை வெறும் அணி மட்டும் இல்லை, அது ஒரு குடும்பம்! வெளியான உணர்ச்சிபூர்வமான வீடியோ!

Summary:

Kedar jadhav gives food to captain dhoni

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 31 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதுவரை நடந்த 8 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றிபெற்றுள சென்னை அணி 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு சென்னை அணி ஏறக்குறைய இடம்பெற்றுவிட்ட நிலையில், நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் கைதராபாத் அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி. கைதராபாத்தின் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த ஆட்டமானது நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

பொதுவாக சென்னை அணி என்றாலே சென்னை ரசிகர்களையும் தாண்டி மற்ற ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான அணி. அதற்கு காரணம் தல தோணிதான் என்றால் மிகை ஆகாது. அதேபோல தனது வீரர்களை தோணி கையாளும் விதமும் அனைவர்க்கும் மிகவும் பிடித்தமான ஒன்றுதான்.

இந்நிலையில் தல தோனிக்கு சென்னை அணியின் வீரர் கேதர் ஜாதவ் சாப்பாடு ஊட்டி விடும் வீடியோ வைரலாகிவருகிறது. ஜாதவ் ஊட்டி விட, தோணி தண்ணீர் அருந்தும் வீடியோ வெளியாகி CSK ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.

View this post on Instagram

Bromance ❤️

A post shared by Kedar Jadhav (@kedarjadhavofficial) on


Advertisement