விளையாட்டு

29 பந்துகளில், 10 விக்கெட்..! ஒரே ஆளாக வீழ்த்தி அனைவரும் திரும்பி பார்க்க வைத்த கேப்டன்..!

Summary:

Kashvee Gautam stars as Chandigarh beat Arunachal Pradesh

19 வயதிற்கு உட்பட பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சண்டிகர் வீராங்கனை ஒருவர், வெறும் 29 பந்துகளில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ள சம்பவம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான் போட்டியில் சண்டிகர் மற்றும் அருணாச்சல பிரதேசம் அணிகள், ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பாவில் உள்ள கே.எஸ்.ஆர்.எம் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த சண்டிகர் அணி 50 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்தது.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அருணாச்சல பிரதேசம் அணி வீராங்கனைகள் சண்டிகர் அணியின் கேப்டனான காஷ்வீ  கவுதம் வீசிய 29 பந்துகளில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து 25 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தனர்.

காஷ்வீ  கவுதம் வீசிய 29 பந்துகளில் தொடர்ந்து 6 பந்துகள் டாட் பால் ஆன நிலையில் மீதமுள்ள 23 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் காஷ்வீ  கவுதம். காஷ்வீ  கவுதமின் இந்த அபார சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Advertisement