விளையாட்டு

சூப்பர் தலைவா!! ஜென்டில்மேன்னு காட்டிடீங்க!! ஷூ லேஸை கட்டிவிட்டது யார் தெரியுமா..? வைரலாகும் வீடியோ..!

Summary:

ஜோஸ் பட்லர் எதிரணி வீரருக்கு ஷூ லேஸை கட்டிவிடும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஜோஸ் பட்லர் எதிரணி வீரருக்கு ஷூ லேஸை கட்டிவிடும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஐபில் 14 வது சீசன் T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின்படி பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், சென்னை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. மற்ற அணிகளும் அனைத்தும் புள்ளி பட்டியலில் முன்னேற தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் பெங்களூரு - ராஜாஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி ௨௦ ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய பெங்களூரூரு அணி வீரர்கள் 16.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடுத்து அபார வெற்றி பெற்றனர்.

பெங்களூரு அணி சார்பாக இளம்வீரர் தேவ்தத் படிக்கல் 101 ரன்களும், கேப்டன் விராட் கோலி 72 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றிபெற செய்தனர்.

இந்நிலையில் பெங்களூரு அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது பெங்களூரு அணி வீரர் தேவ்தத் படிக்கலின் ஷூ லேஸ் கழன்று விட்டது. அப்போது அங்கு வந்த ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லர், எந்த ஒரு தயக்கமும் இன்றி பெங்களூரு அணி வீரர் தேவ்தத் படிக்கலின் ஷூ லேஷை கட்டிவிட்டு சென்றார்.

பொதுவாக கிரிக்கெட் என்றாலே ஜென்டில்மேன் ஆட்டம் என அனைவரும் வர்ணிப்பது வழக்கம். அதற்கு உதாரணமாக ஜோஸ் பட்லர் நடந்துகொண்ட இந்த விதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement