விளையாட்டு

இங்கிலாந்து வேகபந்து வீச்சாளருக்கு சவால் விடும் ஆஸ்திரேலியா வீரர் மெக்ராத்..!

Summary:

james-andersons-next-bar-is-600-wickets

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் ஆண்டர்சன், அவரது டெஸ்ட் போட்டிகளில் அதிகம் விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவர் தனது இந்த சாதனையை இந்திய உடன் நடந்த டெஸ்ட் தொடரின்போது தான் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை, 143 போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 564 விக்கெட்களை வீழ்த்தியுள்‌ளார்.

டெஸ்ட் போட்டிகளின் தரவரிசை பட்டியலில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் இலங்கை வீரர் முத்தையா முரளீதரன் 800 விக்கெட் வீழ்த்தி தொடர்ந்து முதல் இடத்தில உள்ளார். அவரை அடுத்து ஷேன் வார்னே 708, கும்ளே 619 விக்கெட்களுடன் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். 564 விக்கெட்களுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 563 விக்கெட்களுடன் மெக்ராத் 5வது இடத்தில் உள்ளார்.

இதனை குறித்து ஜேம்ஸ் அன்டேர்சனிடம் பேட்டி எடுக்கையில் " இது நான் இதுவரை செய்யாத சாதனை தான், எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இங்கிலாந்து அணிக்காக மகிழ்ச்சியுடன் நான் விளையாடுகிறேன் என்றும் இது ஒரு அற்புதமான  பணி" என்றும் கூராயுள்ளார். 

தன்னுடைய சாதனையை முறியடித்த ஆண்டர்சன் குறித்து மெக்ராத் கூறுகையில் “ஆண்டர்சன் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். என்னுடைய சாதனையை அவர் கடந்துவிட்டார். அவரது அடுத்த இலக்கு 600 விக்கெட். ஆண்டர்சனால் 600 விக்கெட் எடுக்க முடிந்தால், அது வியக்கதகு முயற்சியாக தான் இருக்கும்" என்று கூறியுளளார். 

இந்நிலையில் அடுத்து நடக்கும் டெஸ்ட் தொடரில் எனக்கு ஓய்வு கொடுத்துவிட வேண்டாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதனை அடுத்து இங்கிலாந்து அணி, அடுத்து இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடர்களில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக ஆண்டர்சன், பிராட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


Advertisement