ராஜா கைய வச்சா.. அது ராங்கா போனதில்லே.! மின்னல் வேகத்தில் துல்லியமான த்ரோ.! ஆட்டத்தை தலைகீழாக மாற்றிய ஜடேஜா.!

ராஜா கைய வச்சா.. அது ராங்கா போனதில்லே.! மின்னல் வேகத்தில் துல்லியமான த்ரோ.! ஆட்டத்தை தலைகீழாக மாற்றிய ஜடேஜா.!


jadeja-played-very-well-yesterday

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தபஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

நேற்றைய போட்டியில் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக பீல்டிங் செய்தார். பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரரான கே.எல்.ராகுல், பந்தை ஜடேஜா பீல்டிங் நின்று கொண்டிருந்த திசை பக்கம் அடித்துவிட்டு, ரன் ஓடினார். ஆனால், ஜடேஜா மின்னல் வேகத்தில் பந்தை தடுத்து ரன் அவுட் செய்தார். மேலும் கிறிஸ் கெய்ல் அடித்த பணத்தையும் கேட்ச் பிடித்து வெளியே அனுப்பினார். 

பஞ்சாப் அணியின் இரண்டு நட்சத்திர வீரர்களையும், ஜடேஜா தன்னுடைய சிறப்பான பீல்டிங் மூலம் வெளியேற்றியதால் அந்த அணி மிக குறைந்த ரன்களே எடுக்க முடிந்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக தீபக் சாஹர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நேற்றைய ஆட்டத்தில் 15.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து, 107 ரன்கள் எடுத்து சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் ஜடேஜா, கே.எல்.ராகுலை ரன் அவுட் செய்ததை, ராஜா கைய வச்சா.. அது ராங்கா போனதில்லை என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.