
jadeja in semi final world cup
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக்கோப்பை முதல் அரையிறுதி போட்டி நேற்று மழையின் காரணமாக பாதிக்கப்பட்டு இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.
எளிமையான இலக்கை வென்றுவிடலாம் என்ற கனவோடு பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது நியூசிலாந்து அணி. ஆட்டத்தின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது ஓவர்களில் ரோகித் சர்மா(1), விராட் கோலி (1), லோகேஷ் ராகுல்(1) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து 10 வது ஓவரில் ஆட்டமிழந்தார். முதல் 10 ஓவர்களிலேயே முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதனை தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் ஹார்டிக் ஆகியோரும் விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதனால் ரசிகர்கள் நம்பிக்கையை இழந்து மிகுந்த வருத்ததில் இழந்த நிலையில் அவர்களை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தோனியும், ஜடேஜாவும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி மீண்டும் நம்பிக்கையை கொடுத்துள்ளனர்.
மேலும் சூறாவளியாக களமிறங்கிய ஜடேஜா 3 சிக்ஸருடன், 39பந்திற்கு 51ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். மேலும் தோனியும் 52பந்திற்கு 28ரன்கள் எடுத்துள்ளார். இதனால் இந்திய ரசிகர்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என பெரும் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.
Advertisement
Advertisement