நேற்றைய போட்டிக்கு நடுவே விராட்கோலி செய்த காரியம்! கண்டுபிடித்து ட்விட்டரில் கமெண்ட் செய்த சச்சின்!

நேற்றைய போட்டிக்கு நடுவே விராட்கோலி செய்த காரியம்! கண்டுபிடித்து ட்விட்டரில் கமெண்ட் செய்த சச்சின்!


ipl t20 privisha six and virat kholi reaction viral video

நேற்று நடந்த ஐபில் போட்டியின் நடுவே பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி பந்தில் எச்சில் தடவ முயன்றதும் பின்னர் சுதாரித்துக்கொண்டு அவர் கொடுத்த ரியாக்சனையும் குறித்து சச்சின் டெண்டுல்கர் ட்விட் செய்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான ஐபில் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 19 முதல் தொடங்கி நடந்துவருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெற்றது.

டெல்லி அணியின் மாபெரும் வெற்றிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரிதிவிஷாவின் அதிரடி ஆட்டமும் ஒரு காரணம். மிகவும் அபாரமாக விளையாடிய ப்ரிதிவிஷா 23 பந்துகளில் 42 ரன்களை அடித்தார். அதிலும் பெங்களூரு அணி வீரர் சைனி வீசிய பந்தில் ப்ரித்விஷா அடித்த சிக்ஸர் ஒன்று பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

virat kholi

இந்த சிக்ஸர் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சச்சின் டெண்டுல்கர், ப்ரிதிவிஷா அடித்த அந்த சிக்ஸர் நம்ப முடியாத ஒன்றாக அமைந்ததாக கூறியுள்ளார். மேலும் பந்தில் எச்சிலை பயன்படுத்த முயன்ற விராட் கோலி சுதாரித்துக்கொண்டதை மில்லியன் டாலர் ரியாக்சன் எனவும்,   சமயத்தில் இப்படி நடக்கும் எனவும் சச்சின் கூறியுள்ளார்.

பொதுவாக கிரிக்கெட் விளையாடும்போது வீரர்கள் பந்தில் எச்சிலை தடவுவது வழக்கமான ஒன்று. ஆனால் கோவிட் காரணமாக பந்தில் எச்சிலை தடவ கூடாது என தற்போது விதிமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது.