தோல்வியே சந்திக்காத சென்னை அணிக்கு இன்று காத்திருக்கும் பேரதிர்ச்சி! என்ன விஷயம் தெரியுமா?

தோல்வியே சந்திக்காத சென்னை அணிக்கு இன்று காத்திருக்கும் பேரதிர்ச்சி! என்ன விஷயம் தெரியுமா?


ipl-t20-csk-vs-mumbi-today-match

ஐபிஎல் போட்டியின் 12வது சீசன் மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள போட்டிகளில் சிஎஸ்கே, பஞ்சாப், சன்ரைசர்ஸ், கேகேஆர் ஆகிய நான்கு அணிகளும் சிறப்பாக ஆடி  புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ளன. கடந்த சீசனில் சொதப்பிய மும்பை அணி இந்த முறை அந்த தவறை செய்யாது என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுளது முன்பை அணி. இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியுடன் மோதுகிறது. தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி, இதுவரை ஆடிய 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரு அணிகளும் எதிரும் புதிருமான அணிகள் என்பதால் இந்த போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

IPL 2019

மும்பை அணியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா இணைந்தது சற்று ஆறுதலாக இருந்தது. தற்போது முன்பி அணிக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் இடது கை இளம் ஃபாஸ்ட் பவுலர் பெஹ்ரெண்டோர்ஃப் மும்பை அணியில் இணைந்துள்ளார். எனவே கூடுதல் உற்சாகத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

மும்பை அணியின் இந்த அதிரடி சென்னை அணிக்கு சற்று சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்ற சென்னை அணி இன்றைய போட்டியில் மும்பை அணியை வெல்லுமா? பொறுத்திருந்து பாப்போம்.