அவர் இல்லாம இனி எப்படி?? முக்கிய வீரரை ஏலத்தில் எடுக்க தவறிய சென்னை அணி!! வருத்தத்தில் ரசிகர்கள்..

அவர் இல்லாம இனி எப்படி?? முக்கிய வீரரை ஏலத்தில் எடுக்க தவறிய சென்னை அணி!! வருத்தத்தில் ரசிகர்கள்..


ipl-t20-2022-csk-team

ஐபில் போட்டிக்கான மெஹா ஏலம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

ஐபில் T20 கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம், கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த ஆண்டிற்கான ஐபில் போட்டிகள் விரைவில் தொடங்க உள்ளது. மேலும், இந்த ஆண்டு இரண்டு புதிய அணிகள் ஐபில் போட்டியில் பங்கேற்க உள்ளது.

இதனால் அனைத்து அணி வீரர்களும் கலைக்கப்பட்டு மெஹா ஏலம் நடைபெற்றுவருகிறது. பெங்களூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பல இளம் வீரர்கள் பல கோடிகளில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். சென்னை அணியை பொறுத்தவரை ராபின் உத்தப்பாவை அவரது அடிப்படை விலையான 2 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.

csk

அதேநேரம் டூப்ளஸியை சென்னை அணி ஏலத்தில் எடுக்க தவறிவிட்டது. சென்னை அணிக்காக பல வெற்றிகளை தேடி தந்தவர் டூப்ளஸி. அதிலும், கடந்த சீசனில் அவரது சிறப்பான ஆட்டம் சென்னை அணியை இறுதிவரை அழைத்துச்சென்று கோப்பையை கைப்பற்ற உதவி செய்தது.

சென்னை அணி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவரான டூப்ளஸியை சென்னை அணி ஏலத்தில் எடுக்க தவறியது சென்னை அணி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.