விளையாட்டு

ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் நடத்த திட்டம்..! எப்போது, எப்படி நடக்கும்..? கங்குலி விளக்கம்..!

Summary:

IPL T20 2020 without fans

ஐபில் கிரிக்கெட் போட்டிகளை இந்த ஆண்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுவருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல், ஊரடங்கு காரணமாக அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் தொடங்க இருந்த ஐபில் கிரிக்கெட் போட்டிகள் கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐபில் கிரிக்கெட் போட்டி மீண்டும் நடைபெறுமா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளநிலையில், இதுகுறித்து பதிலளித்துள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி, ஐபில் கிரிக்கெட் போட்டிகளை இந்த ஆண்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ரசிகர்கள் இல்லாமல் ஐபில் போட்டிகளை நடத்தலாமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுவருவதாக அவர் கூறியுள்ளார்.


Advertisement