விளையாட்டு லைப் ஸ்டைல்

கிரிக்கெட் வீரர் அஸ்வினின் மனைவி யார் தெரியுமா? மனைவி மற்றும் குழந்தைகள் புகைப்படம்.

Summary:

IPL Player ashwin cute wife and daughter photos

தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் கிரிக்கெட் வீரர் அஸ்வின். 1986 ஆம் ஆண்டு பிறந்த இவர் தமிழ்நாடு அளவில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். முதலில் பேட்ஸ்மேனாக தனது கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்த அஸ்வின் பின்னர் ஸ்பின் பவுலராக அவதாரம் எடுத்தார். இவரது பவுலிங் திறமையை பார்த்த இந்திய கிரிக்கெட் வாரியம் இவரை இந்திய அணிக்கு விளையாட தேர்வு செய்தது.

இந்திய அணியில் தனது திறமையை காட்ட தொடங்கிய அஸ்வின் வரிசையாக பல்வேறு சாதனைகள் படைத்தார். குறைந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் பெற்ற இந்த வீரர் என்ற பெருமையையும், உலக அளவில் குறைந்த போட்டிகளில் அதிக விக்கெட் பெற்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் அஸ்வின்.

தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார் அஸ்வின். கிரிக்கெட்டில் புகழ்பெற்று விளங்கும் அஸ்வின் தனது சிறுவயது தோழியான ப்ரீத்தி என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.


Advertisement